Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 1, 2016

லியோனி காவல் நிலையத்தில் புகார்..!


தான் இறந்து விட்டதாக வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பட்டிமன்ற பேச்சாளர் லியோனி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.

நான் பட்டிமன்ற பேச்சாளராகவும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலராகவும் இருந்து வருகிறேன். இதற்கிடையே கடந்த மாதம் 27-ஆம் தேதி என்னுடைய நண்பர் இனிகோ இருதயராஜ், என்னை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் ஆப் முலம் வதந்தி பரவுதாக தெரிவித்தார். மேலும் அந்த தகவலையும் எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே வாட்ஸ் ஆப் முலம் நான் இறந்து விட்டதாக வதந்தியைப் பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனி விபத்தில் மரணமடைந்துவிட்டதாக இன்று காலை முதல் செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic