தன்னுடைய ஜாதகம் மோசமாக இருப்பதாக கூறிய ஜோசியருக்கு பைத்தியம் தான் பிடித்துவிட்டது, இது போன்ற அபத்தமான ஜோசியத்தை கூறி என்னை பயமுறுத்த முடியாது என இலங்கை அதிபர் மைத்திரி பால ஸ்ரீசேனா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கையைச்சேர்ந்த ஜோசியரான ரோஹன விஜேமுனி இலங்கை அதிபரின் ஜாதகம் மோசமாக இருப்பதாகவும், இன்னும் 6 மாதங்களில் அவர் இறந்துவிடுவார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து இலங்கை அதிபர் ஸ்ரீசேனா அம்பலாங்க்கொட மாகாணத்தில் அமைச்சர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த போது பேசிய அவர் "என்னோட ஜாதகம் சரியில்லை என்றும், நான் இன்னும் 6 மாதங்களில் இறந்துவிடுவேன் என ஜோசியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது போன்ற முட்டாள்தனமான ஜோசியத்தை கூறி என்னை பயமுறுத்த நினைத்தால் அது ஒரு காலும் நடக்காது. அந்த ஜோசியக்காரருக்கு பைத்தியம் தான் புடித்திருக்கிறது. எனது ஜாதகம் அவ்வளவு மோசமானதாக இருந்திருக்குமேயானால் நான் அதிபராகவே ஆகியிருக்கமாட்டேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments