Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

இரட்டை கோபுர தாக்குதல் - சவுதி மீது வழக்கு தொடரும் மசோதா ரத்து!


கடந்த 2001 ஆம் ஆண்டு செம்படம் 9ஆம் தேதி அன்று பயங்கரவாதிகளால் உலக வர்த்தக மையமான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரம் இரண்டு விமானங்கள் மூலமாக தாக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் 2996 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 6 ஆயிரம் பேர் காயம் அடைந்திருந்தனர், மேலும் பல லட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டது.

இந்த இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா தீவிரவாத அமைப்புதான் காரணம் என அமெரிக்கா தெரிவித்தது. அதன் விளைவாக சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் கழித்து அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின் பின்லேடனை பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகருக்குள் புகுந்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரனையின் அடிபடையில் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியா இருந்ததாக கூறப்பட்டது. தாக்குதலுக்கு பயன்படுத்திய விமானங்களை கடத்திய 19 அல் கொய்தா தீவிரவாதிகளில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் என அமெரிக்கா தெரிவித்தது.

இந்நிலையில், சவுதி அரேபியா அரசின்மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என இந்த தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் சொத்துகளை பறிகொடுத்தவர்களின் வாரிசுகள் தீர்மானித்தனர்.

இதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான அதிகாரத்தை அமெரிக்க மக்களுக்கு அளிக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இருந்தும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்ட இந்த மசோதாவை அதிபர் ஒபாமா இன்று தனது வெட்டுரிமையால் (வீட்டோ அதிகாரம்) நிராகரித்தார்.

JASTA எனப்படும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான நீதி என்னும் இந்த சட்டத்தை அனுமதித்தால் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் பிறநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டிய சூழல் நேரிடும்.

மேலும், அமெரிக்கா நீண்டகாலமாக கடைபிடித்துவரும் பிறநாட்டின் இறையாண்மை தொடர்பான சர்வதேச கொள்கைகளுக்கு தீமையாக அமைந்துவிடுவதுடன் கடல் கடந்து வாழும் அமெரிக்கர்கள் மீதும் எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிட்டுள்ள அதிபர் ஒபாமா, இந்த சட்ட மசோதாவை நிராகரித்து கையொப்பமிட்டுள்ளார்.

இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் ஒரு வெளிநாட்டை சேர்ந்த அரசு இருந்துள்ளது என்பதை அறிந்து அதற்குரிய வகையில் செயலாற்ற இதைப்போன்ற சட்டம் சரியான வழிமுறையாக இருக்க முடியாது.

இத்தகைய சட்டம் ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவை எண்ணியும், உலகளவில் நாம் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் நமது நட்பு நாடுகளுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சியும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த சட்டத்தை நிராகரித்துள்ளதாக அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிபர் ஒபாமாவுக்கு குடியரசு கட்சி அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட மசோதாவை ஒபாமா புறக்கணித்தது அவமானகரமான செயலாகும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப், நான் நாட்டின் அதிபராக பொறுப்பேற்றால் உடனடியாக இதுபோன்ற சட்டத்தில் கையொப்பமிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த முடிவை இன்று எடுத்துள்ள அதிபர் ஒபாமாதான், தீவிரவாதி ஒசாமா பின்லேடனை ஒழித்துக் கட்டி சில எதிர்க்கட்சியினர் எதிர்த்தபோதும் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic