Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

தொலைந்து போன ஆவணங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்!

case has been filed for missing documents

இஷ்ரத் ஜகான் எண்கவுன்டர் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் தொலைந்து போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆகியோர் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்றும் அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டார்கள் என கூறி அவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஆனால் இது போலி எண்கவுன்டர் என வாதம் இருந்து வந்தந்து. இந் லையில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. தற்போது தொலைந்து போன ஆவணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்புடைய 5 ஆவணங்களில் நான்கு தொலைந்துவிட்டது. எவ்வாறு? எப்படி? எந்த சூழ்நிலையில் அது தொலைந்து போனது என்பதை விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த ஆவணங்கள் தொடர்பாக கூடுதல் செயலாளரை மத்திய அரசு நியமித்தது. அதில் கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது இது தொடர்பான ஆவணங்கள் தொலைந்து போயிருக்கிறது. பின்னர் அதனை தேடும் பணி நடைபெற்றபோது தொலைந்து போன 5 ஆவணங்களில் ஒன்று மட்டும் கண்டெடுக்கப்பட்டது.

இருந்த போதிலும் தொலைந்து போன ஆவணங்கள் தொடர்பாக முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரமோ அல்லது யுபிஏ அரசாங்கமோ குற்றஞ்சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic