Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 1, 2016

தலித் என்பதற்காக பழிவாங்கப்பட்டேன்! - பதவி பறிக்கப்பட்ட ஆம் ஆத்மி அமைச்சர்


தாம் தலித் என்பதால் சதித்திட்டம் மூலம் பழிவாங்கப்பட்டுள்ளதாக டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் கூறியுள்ளார். தம்மை குறித்து வெளியான சிடி போலியானது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி சமூக நலத்துறை பெண் ஊழியர் ஒருவருடன் அதே துறையின் அமைச்சரான சந்தீப் குமார் இருக்கும் ஆபாச சிடி வெளியானது. இதையடுத்து அவரை முதலமைச்சர் கெஜ்ரிவால் டிஸ்மிஸ் செய்தார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தீப் குமாரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தின. சிடி பற்றி விளக்கம் அளித்துள்ள சந்தீப் குமார் அதில் இருப்பது தாம் அல்ல என்று கூறியுள்ளார். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக போலி சிடி தயாரித்துள்ளது என்பது அவரது புகார். தலித் அல்லது யாராக இருந்தாலும் பொது வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் பதவி நீக்கப்பட வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது. டெல்லி அமைச்சரவையில் இருந்த ஒரே தலித் அமைச்சர் சந்தீப்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic