தமிழக உளவுத்துறை டிஜிபி மற்றும் சட்டம், ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக டி .கே. ராஜேந்திரனையும், சென்னை மாநகர காவல் துறை ஆணையராக எஸ்.ஜார்ஜையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்பு, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவி வகித்த டி .கே. ராஜேந்திரன், தமிழக உளவுத்துறை டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இன்று காலை நியமிக்கப்பட்டார். தமிழக அரசின் உத்தரவு வந்தவுடன் அவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜை மீண்டும் நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது.
ஏற்கெனவே, சென்னை மாநகர காவல் ஆணையாளராக மூன்றாண்டுகள் பணிபுரிந்த எஸ்.ஜார்ஜ், தற்போது தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments