Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

தலித் மக்களின் வழிபாட்டு உரிமை மீட்பு‍! தீண்டாமை ஒழிப்பு முன்னனிக்கு கிடைத்த வெற்றி!‍


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கை காரணமாக தலித் மக்களின் தெருக்களில் சாமி ஊர்வலம் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ளது வரகூர் ஊராட்சி. இந்த கிராமத்தில் மற்ற சில சாதியினரைப் போல, இந்து ஆதிதிராவிட மக்களும் வசித்து வருகின்றனர். ஊரின் ஏரிக்கரையின் கீழ், பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், மூதாதையர் காலம் தொட்டு, 10 நாள் திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.
விழாவின் கடைசி நாளான 10 ம் நாள் திருவிழா, தலித் மக்களின் பங்களிப்புடன், அவர்களின் வழிபாட்டு உரிமையாக நடத்தப்படுவதும் வழக்கம். கடைசி ஒருநாள் திருவிழாவை காலனி பகுதி மக்களே தங்களுக்குள் நிதி வசூல் செய்து நடத்துவார்கள். இதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் வழிபட்டு வந்துள்ளனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவாகவே இக்கோயில் இருந்தது. ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த வேடி என்பவர் தலைவராக இருந்தபோது, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, பொது வசூல் செய்து கோயில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்த் திருவிழாவும், கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அப்போது, நடைபெற்ற 10 நாள் திருவிழாவின்போது, சாமி தேர் ஊர்வலம் கோவிலில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று, பின்னர் பிரதான சாலை வழியாக வரும்.

அந்த நேரத்தில் ஒரு பிரிவு மக்கள் தீபாராதனை செய்தனர். தொடர்ந்து, தலித் பகுதிக்குள் சிறிது தூரம் மட்டுமே சாமி ஊர்வலம் வந்தது. திடீர் என இதற்கு மேல் ஊர்வலம் காலனிப் பகுதிக்கு வராது என, சாதி வன்மத்தோடு பேசி நிறுத்திவிட்டனர். 10 நாள் திருவிழாவில் தலித் மக்களின் உரிமை இருப்பினும், பிரச்சனை ஏதும் நிகழக்கூடாது என்று, தலித் மக்கள் இதுவரை அமைதிகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று (செப் 14) பிடாரி காளியம்மன் திருவிழா தொடங்குவதாக விழாக்குழுவினர், தலித் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலித் மக்கள் சென்று கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் தலித் மக்கள் பேசியபோது, நடைபெற உள்ள 10 நாள் திருவிழாவின் கடைசி தினமான 10ம் நாள் விழா தலித் மக்களின் உரிமைப்படி நடைபெற வேண்டும். சாமி ஊர்வலம் நடக்கும் போது, தலித் காலனி சாலைகளுக்கும் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், விழாக்குழுவினர், தலித் மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். காலங்காலமாக ஒற்றுமையுடன் முன்னோர்கள் நடத்திய திருவிழாவை, தலித் மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, செயல்படுவது சாதி ரீதியான ஒடுக்குமுறையாகும் எனவே, நடைபெறும் 10 நாள் திருவிழாவின் கடைசி நாளான 10 ம் நாள், தலித் மக்கள் பங்களிப்புடன் நடைபெற வேண்டும், சேரித் தெருக்களில் சாமி ஊர்வலம் வருவதை தடுக்கக்கூடாது என்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதையடுத்து, திங்கள் அன்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் ப.செல்வன், தலைவர் எம்.ரவி மற்றும் நிர்வாகிகள், வரகூர் திருவிழா விழாக்குழுவினர், வரகூர் தலித் மக்கள் உள்ளிட்டோரை அழைத்து கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், திருவிழாவில், வழக்கம் போல், 10ம் நாள் விழாவின்போது, வரகூர் தலித் மக்கள் வசிக்கும் தெருக்களில் பிடாரி காளியம்மன் தேர் ஊர்வலம் செல்லும், தலித் மக்களுக்கான வழிபாட்டு உரிமையை அவர்கள் பயன்படுத்தலாம் என்று பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic