Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

நீதிமன்றங்களில் சீரான கட்டணம் எப்போது? - உயர்நீதிமன்றம்


நீதிமன்றங்களில் ஒவ்வொரு வழக்கையும் பதிவு செய்ய, ஒவ்வொருவிதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணங்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் வழக்கறிஞர்களும் பலமுறை கோரிக்கை எழுப்பியுள்ளனர். இதற்காக, தனிக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு சில பரிந்துரைகளை தமிழக அரசுக்குக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிமன்ற கட்டணச் சீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு தேவைப்படும் கால அவகாசம் குறித்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம், மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிமன்ற கட்டணங்களில் வேறுபாடுகள் உள்ளன. ஆகையால், ஒரேவிதமான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, கடந்தாண்டு டிசம்பர் 8ஆம் தேதி, நீதிமன்றக் கட்டணத்தை ஒரேமாதிரியாக நிர்ணயம் செய்வதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சம்பத் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழுவானது பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களின் கருத்துகளைப் பெற்று, தனது பரிந்துரை அறிக்கையை கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்தப் பரிந்துரையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் தவிர்த்து, மற்ற மனு தாக்கலுக்கான கட்டணத்தை ரூ.200 லிருந்து ரூ.1,000 ஆகவும், மேல் முறையீட்டு மனுக்களுக்கான கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ. 1,000 ஆகவும், ரூ.2 ஆயிரத்துக்கு மிகாமலும் நிர்ணயிக்கலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சிவில் வழக்கு தொடர்பான மனு தாக்கலுக்கு ரூ.200லிருந்து ரூ. 500 ஆகவும் அதிகரிக்கலாம். அதேபோல், கட்டணங்களை நவீன முறையில் செலுத்துவதற்கான வசதிகளைக் கொண்டு வரலாம் என்றும் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குழுவின் பரிந்துரைகளை படித்துப் பார்த்த நீதிபதிகள், இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து, தமிழக அரசு பதில் அளிக்குமாறு தெரிவித்து, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic