கோவையில் வன்முறை செயல்களில் ஈடுபடுவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகள் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தகக்து. இத்தகைய கூலிப்படைக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கோவையில் நடந்த கொலையை அடுத்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை காவல்துறை எப்படி அனுமதித்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
வன்முறையில் ஈடுபடுவோரின் முகங்கள் தொலைக்காட்சி செய்திகளிலும், செய்தித்தாள் புகைப்படங்களிலும் தெளிவாக தெரிகின்றன. எனவே, சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது, தான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்'' என்று வீரமணி கூறியுள்ளார்.

No comments:
Write comments