இரட்டை கொலை, இரு சகோதரிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மற்றும் மாட்டிறைச்சி பிரியாணி விவகாரத்தில் போலீஸ் சோதனை நடத்தியது எல்லாம் ஒரு ‘சிறிய பிரச்சனை’ என்று கூறிஉள்ள ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், இது நாட்டின் எல்லா பகுதியிலும்தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டு 50-ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியில், மேவாத் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் மாட்டிறைச்சி பிரியாணி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மனோகர் லால் கட்டா பதில் அளிக்கையில், “இது பிரச்சனையே கிடையாது. இதுபோன்ற சிறிய விவகாரங்கள் மீது எல்லாம் நான் அதிகமாக கவனம் செலுத்துவது கிடையாது. இன்று நாம் ஸ்வர்ண ஜெயந்தி பற்றி பேசவேண்டும்.” இது ஒரு சிறிய பிரச்சனை, நாட்டில் எல்லா பகுதியிலும் இது நடக்கிறது என்று கூறிஉள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி மேவாத்தில் 20 வயது இளம்பெண்ணும் அவருடைய உறவுகார சிறுமியும் வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அதனை தடுக்க முயன்ற அவர்களுடைய மாமா மற்றும் மாமியை வன்முறை கும்பல் கொலை செய்துவிட்டது.
ஹரியானா மாநிலத்தில் மாமிசத்துக்காக பசுவை கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது, இதற்காக கடந்த வருடம் மாநிலத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி ஹோட்டல்களில் மாட்டிறைச்சி பிரியாணி விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து மேவாத் போலீசார், கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி பிரியாணி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் பிரியாணியில் இருந்து பசு மாமிசம் என்பது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

No comments:
Write comments