ஜம்மு கஷ்மீர் மாநிலம் உரி இராணுவ தலைமையகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.
எல்லையில் உரி இராணுவ தலைமையகத்திற்குள் காலை 4 மணியளவில் புகுந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். பின்னர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர், பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க தொடங்கினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தீயினால் பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து பாராமுல்லா இராணுவ பிராந்திய தலைமையகத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் அப்பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது.
காயம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தும் பணியை தீவிரப்படுத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டாலும், அப்பகுதியில் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கிஉள்ளனரா என்று பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலை அடுத்து டெல்லியில் இருந்து ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார். பாதுகாப்பு துறை அதிகாரிகளும் காஷ்மீர் விரைகின்றனர். ராணுவ தளபதி தல்பீர் சிங்கும் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளார்.
ஷலாமாபாத் வழியாக எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகளின் கைவேலையாக இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. தாக்குதலை அடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு உள்ளனர். இருவருடங்களுக்கு முன்னதாக இதே பகுதியில் மொக்ராவில் இதுபோன்ற தாக்குதலை பயங்கரவாதிகள் முன்னெடுத்தனர். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற்ற இத்தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த ஜனவரியிலும் பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவி பதன்கோட் விமானப்படை தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். 4 நாட்கள் நடைபெற்ற சண்டையில் பாதுகாப்பு படையினர் தீரமுடன் பதிலடி கொடுத்து, 6 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இருப்பினும், இந்த தாக்குதலின்போது, நமது பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தது நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியது.

No comments:
Write comments