நீங்கள் விரும்பினாலு சரி விரும்பாவிட்டாலும் சரி டொனால்ட் டிரம்ப் தான் அமெரிக்காவின் அடுத்த பிரதமர் என அமெரிக்க மனோதத்துவ நிபுணர் ஊரி கெல்லர் தெரிவித்துள்ளார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, இதற்கு முந்தைய இருந்த பெரும்பாலான அமெரிக்க அதிபர்களின் பெயர்கள் 11 எழுத்துக்கள் கொண்டவை. அதன் அடிப்படையில் பார்க்கும்போது டொனால்ட் டிரம்பின் பெயர் 11 எழுத்துக்களை கொண்டுள்ளது. அவரே வரும் நவம்பரில் நடைபெறப்போகும் தேர்தலில் வெற்றி பெறப்போகிறார் என தெரிவித்துள்ளார்.
ஊரி கெல்லர் மனோ தத்துவ நிபுணராக இருக்கிறார். பல சமயங்களில் டெலிபதி, மனோ தத்துவம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துபவராவார்.

No comments:
Write comments