Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

விநாயகர் சதுர்த்தி கழிவுகளை அகற்றும் தன்னார்வ தொண்டூழியர்கள்! (வீடியோ)


ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த கொண்டாட்டம் சற்று அதிகமாகவே காணப்படும்.

மகாராஷ்டிராவில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாக்களில் ஆட்டம் பாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டங்கள் அதிகரித்து கொண்டே சென்றாலும் கொண்டாட்டத்தின் மறு நாள் நடக்கும் நிகழ்வுகள் மட்டும் மாறுவதே இல்லை. காரணம் சிலை கரைக்கப்பட்ட மறு நாள் கடற்கரை ஓரங்களில் டன் கணக்கில் குப்பைகள், கழிவுகள், பூக்கள், அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் என குவிந்து கடக்கும். 

இத்தகை குப்பைகள் கடல் தண்ணீரை வெகுவாக மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வருடமும் முன்வைக்கப்படுகிறது. இதனை சுத்தம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் தன்னார் தொண்டூழியர்களே வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் நீக்கு கடற்கரையை மீண்டும் சுத்தமாக்க குறைந்த பட்சம் 2 மாதங்கள் ஆவதாக தொண்டூழியர் ஒருவர் தெரிவித்தார். மும்பை மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தொண்டூழியர்களும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இது மதம் சார்ந்த கொண்டாட்டங்களாக இருப்பதினால் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் விநாயகர் சிலை உருவாக்குவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கலிமண்ணால் ஆன சிலைகள், நீரில் கரையக்கூடிய வஸ்துகளை கொண்ட சிலைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டுமென்றும், ரசாயன பொருட்களை கொண்டு விநாயகர் சிலை உருவாக்குவதை தவிர்க்க வேண்டுமென விதிகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அதனை ஏற்காத நிலையே காணப்படுகிறது. ரசாயன அமிலங்களால் உருவாக்கப்படும் சிலைகளை கரைப்பதினால் நீர் முற்றிலுமாக மாசுபடுவதோடு அதிலே வாழக்கூடிய உயிர்களையும் பறித்துவிடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பிறகு கடற்கரை ஓரங்கலிலிருந்து 2033 மெட்ரி டன் அளவிற்கு கழிவு பொருட்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியின் போது கிட்டத்தட்ட 40,000 சிலைகள் கரைக்கப்பட்டிருப்பதால் இவ்வருடம் இன்னும் கூடுதலாக கழிவுகள் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic