Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

நான் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பின்பற்றுகிறேன்: அமைச்சர் மனோகர் பாரிக்கர்!

 

கோவா மாநில ஆர்.எஸ்.எஸ்ஸில் நடந்துக் கொண்டிருப்பவை குறித்து எந்த கருத்துக்களையும் தெரிவிக்காத பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தான் ஒரு ‘ஒழுக்கமான சுவசேவகர்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுபாஷ் வெலிங்கர் புதுக்கட்சி தொடங்கியிருப்பது குறித்து, மனோகர் பாரிக்கர் வெளிப்படையான கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை. “நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இது ஜனநாயக நாடு” என்று கோவாவின் முன்னாள் முதலமைச்சரான பாரிக்கர் தெரிவித்தார். “நான் ஒரு சுயசேவகர்.

நான் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பின்பற்றுகிறேன். நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பின் தொடர விரும்பினால், அதன் கிளை அலுவலகத்துக்குத்தான் போக வேண்டும். ஒழுக்கம் தான் எனக்கு முக்கியமான அங்கம். நான் ஒழுக்கத்தைப் பின்பற்றியிருக்கிறேன். பின்பற்றுவதை தொடர்வேன். உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். குறித்து எதாவது தகவல் வேண்டுமானால், நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை தான் தொடர்பு கொள்ள வேண்டும்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சுகாதார முகாமில் நிருபர்களிடம் பேசிய பாரிக்கர் இக்கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அதன் கோவா விபாக் சங்கத்தின் உறுப்பினரான வெலிங்கரை விடுவித்திருக்கிறது. அவர் ‘ஆர்.எஸ்.எஸ். கோவா பிராந்’ என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

மேலும், வெலிங்கர் ஒருங்கிணைத்திருக்கும் பாரதிய பாஷா சுரக்‌ஷா மஞ்ச், அக்டோபர் 2ஆம் தேதி புதிய கட்சி ஒன்று தொடங்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். பி.பி.சி.எம். அமைப்பு, 2017 கோவா சட்டசபை தேர்தல்களில் பாஜகவை எதிர்த்து போட்டியிட கட்சி ஒன்றை தொடங்கவிருப்பதாக அறிவித்ததற்கு பிறகே, வெலிங்கர் கோவா ஆர்.எஸ்.எஸ். தலைமை பதவியில் இருந்து விலக்கப்பட்டார். வெலிங்கரின் தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ். கொங்கன் கிளையில் இருந்து விலகி, ஆர்.எஸ்.எஸ். கோவா பிராந்தில் இணைந்திருக்கின்றனர்.

ஆனால், இந்த கிளையை அங்கீகரிக்க ஆர்.எஸ்.எஸ். மறுக்கிறது. வெலிங்கர், கொங்கனி மற்றும் மராத்தி மொழிகளை பள்ளிகளில் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும், பாஜக பள்ளிகளில் ஆங்கிலத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்னை காரணமாக, சமீபத்தில் அமித்ஷா கோவாவுக்கு வந்த போது, வெலிங்கரின் தொண்டர்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic