Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

சொட்டு தண்ணீர் தரமாட்டோம்- அட்டகாசம் செய்யும் வட்டாள்!



இன்று காலை, கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட 300 பேர் தமிழக எல்லைக்குள் நுழைய முயற்சித்தார்கள். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வாட்டாள் நாகராஜ், “காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒரு நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கிறது. அதற்கு துணையாக கர்நாடக முதல்வரும், தமிழக முதல்வரும் நின்று நாடகம் நடத்துகிறார்கள். 

இரு மாநில பிரச்னையைத் தீர்த்து வைக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டு வருகிறது. ஆறு கோடி கன்னடர்களைச் சிறைக்கு அனுப்பினாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு விடமாட்டோம். தமிழக மக்கள் உண்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும். கர்நாடக மக்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை. தமிழர்கள் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்?” என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic