ட்ரோன் (Drone) என்றழைக்கப்படும் ஆளில்லாத குட்டி விமானங்களை பாதுகாப்புக்காக பயன்படுத்தியதே மோடி தலைமையிலான அரசின் மிகப்பெரிய தோல்வி தான் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.பக்ரித் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விழாவில் பேசிய அவர் , பக்ரித் பண்டிகை அமைதியும் கருணையும் மக்கள் மனதில் பெருக வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படுகிறது. எனவே நாடெங்கும் அமைதி நிலவ வேண்டும் குறிப்பாக காஷ்மீரில் கலவரங்கள் குறைந்து அமைதி நிலவ வேண்டும்.” என்று இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துச் சொன்னவர் மோடி அரசை காட்டமாக விமர்சித்தார். ”காஷ்மீரில் பாதுகாப்புக்காக ட்ரோன் (Drone) எனப்படும் குட்டி விமானங்களை பயன்படுத்தியது மோடி தலைமையிலான ஆட்சியின் தோல்வி ஆகும். ட்ரோன் என்பது ரகசியமான உளவு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆளில்லாத குட்டி விமானம் ஆகும். இது போன்ற சாதனங்கள் இதுவரை ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதை முதல் முறையாக பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.இது போன்ற சாதனங்களை பயன்படுத்தியதே மோடி தலைமையிலான ஆட்சியின் மிகப்பெரிய தோல்வி தான். இதற்கு மத்திய மாநில அரசுகள் தான் பொறுப்பேற்றாக வேண்டும்" என்று கூறினார்.

No comments:
Write comments