Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

பசு கோமியத்தை ஆராய்ச்சி செய்ய‌ பல்கலைகழகம் அமைக்க வேண்டும்..!


கெள சேவா அயோக் அமைப்பின் சாரிபில் பஞ்சகாவ்யா தொடர்பான ஆராய்சியை மேற்கொள்வதற்காக பல்கலைகழகம் கட்டப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது..

ஹரியானாவில் மாட்டிறைச்சிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மாட்டின் சாணம், கோமியம், பால் முதலியவற்றிலிருந்து பல்வேறு நோய்களுக்கான நிவாரண மருந்துகள் இருப்பதாக நம்பப்படுகிறது. பசுவை வணங்கும் சிலர் அதன கோமியத்தையும் அருந்துகின்றனர். இந்நிலையில் மாட்டின் பஞ்சகாவ்யாக்களில் மூன்றான பால், கோமியம் மற்றும் சாணத்தை ஆராய்ச்சி செய்வதற்காக பல்கலைகழகம் கட்டப்பட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்காக கெள சேவா அயோக் அமைப்பினர் பல்கலைகழகம் கட்டுவதற்காக தங்களுக்கு 500 ஏக்கரில் நிலம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக கிராமப்புற பஞ்சாயத்து தலைவர்களை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பல்கலைகழம் ஒரு ஆராய்சி நிறுவனமாகவும் செயல்படும் என்றும், மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை ஆராய்சி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தி பெருகும் என்றும் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ஹரியானாவில் மாடிறைச்சி பிரியாணி பரிமாறப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் சோதனை செய்வதற்காக ஹோட்டல்களிலிருந்து பிரியாணியை பறிமுதல் செய்ததும் இவ்வமைப்பைச்சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic