Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

இறந்த இராணுவ வீரர்களுக்காக சிறப்பு தொழுகை!



உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக உத்திரபிரதேச மாநிலம் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நேற்றைய தினம் ஜம்மு கஷ்மீரில் உள்ள உரியில் இராணுவ தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 17 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் உட்பட பல உலகத்தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் ஆத்மாவிற்காக உத்திரபிரதேச மாநிலம் லக்னோவைச்சேர்ந்த சில இஸ்லாமியர்களுக்கு மசூதிக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். இது தொடர்பாக தொழுகையில் பங்கேற்ற ஒரு நபர் கூறியதாவது "ஞாயிற்றுகிழமை கொல்லப்பட்ட நமது நாட்டின் இராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக சிறப்பு தொழுகை மேற்கொண்டோம். இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்டவர்களை எதிர்த்து இந்திய இராணுவ வீரர்கள் தங்களது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லா அதற்கு உறுதுணையாக இருப்பார் என தெரிவித்தார்.

அதே போல மொரதாபாத்திலும் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்யப்பட்டது. உரி தாக்குதலை நடத்தியவர்களை கண்டிப்பாக தண்டிப்போம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic