மூன்று மாதத்துக்கு இலவச அழைப்புகள், டேட்டா என அதிரடி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியதைத் தொடர்ந்து, போட்டியை சமாளிக்க மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டண குறைப்பில் ஈடுபட்டுள்ளன. இதனால், இனி வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான்.
செல்போன் துறையில் பெரிய புரட்சியை தொடங்கி வைத்த ரிலையன்ஸ் நிறுவனம், மற்றுமொரு புரட்சி படைக்க தயாராகி விட்டது. ஜியோ 4ஜி சேவையை வரும் 5ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யும் அந்நிறுவனம், ஜியோ சிம்கார்டு வாங்குபவர்களுக்கு 3 மாத அளவில்லா குரல் மற்றும் வீடியோ அழைப்பு, இணைய சேவையை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி நேற்று முன்தினம் மும்பையில் நடந்த விழாவில் பேசிய, 90 நிமிடத்திலேயே மற்ற மொபைல் நிறுவனங்களின் பங்குகள் ஆட்டம் கண்டு, பல கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறுகிய காலத்திற்குள் 10 கோடி வாடிக்கையாளர்களை பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ள ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு அனைத்து அழைப்புகளும் இலவசம், ₹50க்கு 1 ஜிபி டேட்டா என அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால், மற்ற செல்போன் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ரிலையன்சின் போட்டியை சமாளிக்க, ஏர்டெல், ஏர்செல், ஐடியா, வோடாபோன் உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கட்டண சேவையை குறைப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன. இதனால், இன்னும் ஒரு சில நாட்களில் ஒவ்வொரு நிறுவனங்களும் அதிரடி விலை குறைப்பு சலுகைகள் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து முன்னணி நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தொலைதொடர்பு துறையில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது. கட்டண யுத்தம் ஆரம்பித்து விட்டது. வரும் வாரத்தில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை நிச்சயம் அறிவிக்கும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு மொபைல் கட்டணங்கள் இனி வெகுவாக குறையும்’ என்றார்.

No comments:
Write comments