உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் இந்த வாரம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் வெளியாகவில்லை. ஆனால், தேர்தல் தள்ளிப் போகலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என நான்கு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது, இந்த அமைப்புகளுக்கான ஐந்து ஆண்டு பதவி காலம் வருகிற அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் செலவுக்கான நிதியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்தது. இந்த நடைமுறை இந்தத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதனால் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த இடங்களை ஒதுக்கீடு செய்யலாம் என்ற பணியை அதிகாரிகள் ஏற்கனவே தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆனால், அந்த பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் யோசனையில் மாநில தேர்தல் ஆணையம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழகத்தில் ஊரகம் மற்றும் நகர்புறம் என மொத்தம் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால், பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான பதவிகளை பிரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி பதவிகளை பிரிக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செய்து வருகின்றன. பதவி பிரிப்பு மற்றும் நகர்புற வேட்பாளர்கள் கையேடு ஆகியவை குறித்த விவரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த விபரங்கள் வெளியான பின்னரே தேர்தல் தேதியை அறிவிக்க முடியும். இதன் காரணமாக தேர்தல் தேதியை தள்ளி போடலாமா என்கிற யோசனையில் தேர்தல் ஆணையம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், “உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 24ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதாக, மாநில தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பதவிகளைப் பிரிப்பது தொடர்பான பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி போடுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும்” என்று கூறினார்.

No comments:
Write comments