ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முழு உடல் தகுதியுடன் உள்ளதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை மருத்துவர் லிசா பார்டாக் ஹிலாரியின் மருத்துவ அறிக்கை குறித்து கூறும்போது,"ஹிலாரி உடல் நிலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முழு தகுதியுடன் உள்ளது. ஹிலாரி நிமோனியா காய்ச்சலிருந்து விடுப்பட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறார்" என்றார்.
முன்னதாக இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார். அப்போது உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறைவு செய்தார். அவரது பாதுகாவலர்கள் அவரைப் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து திடீர் உடல் நிலை பாதிப்பால் தேர்தல் நிதி திரட்டுதல் மற்றும் பிரச்சாரத்துக்காக 2 நாள் பயணமாக கலிபோர்னியா செல்லவிருந்த பயணத்தை திடீர் உடல்நலக்குறைவால் ரத்து செய்தார் ஹிலாரி.
ஹிலாரியின் உடல் நிலைக் குறித்து வந்த தகவல்கள் அமெரிக்காவில் பெரும் விவாத பொருளாகியது
அதனை தொடர்ந்து ஹிலாரியின் மருத்துவர் ஹிலாரி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைவார் எனவும் விளக்கம் அளித்தார்.
No comments:
Write comments