Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை..!

never thought of Contempting supreme court
தீர்ப்பை அவமதிக்கும் எண்ணம் தங்கள் அரசுக்கு இல்லை என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்திற்கு 27ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த பலர் இந்த தீர்மானம் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யும் செயல் என குற்றஞ்சாட்டி வந்தனர். இது குறித்து தற்போது பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‛‛ பெங்களூருவின் குடிநீர் தேவைக்கான நீர் மட்டுமே தற்போது அணைகளில் உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி தமிழகத்திற்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை 27ஆம் தேதி வரை திறந்து விட கோரி தீர்ப்பு வழங்கியது.

இது தொடர்பாக கர்நாடக சட்டசபைத்தில் நடந்த பேரவை மற்றும் மேலவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை இக்கடித்ததுடன் இணைத்துள்ளேன், மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வரும் 27ஆம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி வரும் ஜனவரி 2017 க்குள் இந்த நீரை வழங்க அனுமதியளித்து தீர்ப்பில் மாறுதல் செய்ய கோரி கர்நாடகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீரப்பை அவமதிக்கும் எண்ணம் இல்லை '' என குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic