Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

பாகிஸ்தானுக்கு எதிராக போர் மூளும் அபாயம்..?

indian army gets ready for fight with pakisthan

உரி தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம்  உருவாகியுள்ள நிலையில், நாட்டின் முப்படை தளபதிகள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து அவசர  ஆலோசனை நடத்தினர்.

க‌ஷ்மீரின் உரி பகுதியில்  உள்ள இராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவிய  தீவிரவாதிகள் 4 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள்  பலியாயினர். இவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு க‌ஷ்மீர் வழியாக இந்திய  எல்லைக்குள் ஊடுருவியது விசாரணையில் தெரியவந்தது. இதற்கு சரியான நேரத்தில்  பதிலடி கொடுக்கப்படும் என இந்திய இராணுவம் தெரிவித்தது. இந்தியா-பாகிஸ்தான்  எல்லையிலும் இராணுவம் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு  மேற்கொள்ளப்படுகிறது. எந்நேரமும் இந்தியா பதிலடி கொடுக்கலாம் என்ற நிலை  இருப்பதால், பாகிஸ்தானும் போருக்கு தயாராகி வருகிறது. இஸ்லாமாபாத்தில்  நேற்று முன்தினம் பேட்டியளித்த பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் ரகீல் ஷரீப்,  ‘‘எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது’’ என்றார்.

பாகிஸ்தான் போர் விமானங்களும் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. அவசரநிலை ஏற்பட்டால், சமாளிப்பதற்காக பாகிஸ்தான் தேசிய நெடுஞ்சாலைகளிலும் பாகிஸ்தான் போர் விமானங்கள் தரையிறங்கி ஒத்திகை பார்க்கின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் நேற்று காலை இராணுவ தளபதி ஜெனரல்  தல்பீர் சிங், விமானப்படை தளபதி அரூப் ராகா, கடற்படை துணை  தளபதி வைஸ் அட்மிரல் கே.பி.சிங் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து  ஆலோசனை நடத்தினர். இது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது பற்றி இந்த சந்திப்பில்  ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. போர் மூளுமா  என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. எல்லை தாண்டி அமைக்கப்பட்டுள்ள தீவிரவாத முகாம்களை குண்டுவீசி தகர்க்க கடுமையான தாக்குதல் நடத்த இராணுவ அமைச்சகத்தின்  அனுமதி கேட்டு தளபதிகள் கடிதம்  அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இது குறித்தும் பிரதமருடன் முப்படைகளின் தளபதிகள் ஆலோசனையில் இடம்பெற்றது. ஆனால், இது வழக்கமான சந்திப்புதான் என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கான சீன தூதர் யூ போரன், அந்நாட்டின் பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷெரீப்பை நேற்று சந்தித்தார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் மீது யாராவது போர் தொடுத்தால், சீனா முழு ஆதரவு அளிக்கும் என யூ போரன் கூறியுள்ளார். க‌ஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா உள்ளதாகவும், அங்கு அடக்குமுறை நியாயம் இல்லை, க‌ஷ்மீர் மக்களின் விருப்பப்படி க‌ஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என யூ போரன் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வர்த்தக வளர்ச்சி ஆணையம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை டெல்லியில் வர்த்தக கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. அதேபோல் அடுத்த மாதம் டெல்லியில் வர்த்தக கண்காட்சி நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்த கண்காட்சியை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பேச சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்,  க‌ஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத நாடு, உலகத்தில் உள்ள அனைத்து தீவிரவாதிகளின் பயிற்சிகளமாக பாகிஸ்தான் உள்ளது என பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் திரும்பும் வழியில் லண்டன் வந்த நவாஸ் ஷெரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘உரி தாக்குதல் சம்பவம் பற்றி எந்த விசாரணையும் நடத்தாமல், உடனே பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுகிறது இந்தியா. எந்த ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்துவது பொறுப்பற்ற செயல். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலே, பாகிஸ்தான் மீது எப்படி குற்றம் சுமத்த முடியும்? க‌ஷ்மீரில் நடக்கும் அடக்குமுறையின் விளைவுதான் உரி தாக்குதல்’’ என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic