புதுவை உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட குருமாம்பேட்டில் குப்பைக் கிடங்குகள் உள்ளன. இங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் எனதனித்தனியாக தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மேலாண்மை பொறுப்பு அதிகாரியாக இளநிலை பொறியாளர் சிவக்குமார் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், இங்கு மருத்துவக் கழிவுகள் கொட்டுவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும்இதற்கு அரசும் தடை விதித்துள்ளது. எனினும், தனியார் மருத்துவமனைகள் சட்டவிரோதமாக கழிவுகளை அரசு குப்பைக் கிடங்கில் கொட்டிவந்தது. இதனால், நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, உழவர்கரை நகராட்சி ஆணையாளர் ரமேஷ்விரைந்து வந்து பார்வையிட்டார். இதுகுறித்து டிரைவரிடம் விசாரித்ததில், அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்துஇந்தக் குப்பைகள் கொண்டு வரப்படுவது தெரியவந்துள்ளது. இதனால், டிராக்டரை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம்போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் முறைப்படி அழிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாகபோலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைக் கிடங்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரச் சீர்கேடுஏற்படும். அங்கு பணிபுரியும் ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மருத்துவக் கழிவுகளை முறைப்படி அழிக்க வேண்டும். மீறி குப்பைக்கிடங்குக்கு கொண்டுவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, வழுதாவூர் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி, ஓட்டுநரைபோலீசாரிடம் ஒப்படைத்தனர்.

No comments:
Write comments