Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

5 உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனங்களுக்கு ஒப்புதல்!

 

நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவாதங்கள் நாடு முழுக்க நீதித்துறை மட்டங்களில் நடக்கும் நிலையில், நீதிபதிகள் நியமனம் துரிதப்படுத்தப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்கு உறுதியளித்து சில தினங்களே ஆன நிலையில், கடந்த வெள்ளி அன்று குடியரசுத் தலைவர் நாடு முழுவதும் இருக்கும் உயர்நீதிமன்றங்களுக்கு ஐந்து தலைமை நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த நியமனங்கள் கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம், திரிபுரா மற்றும் மணிப்பூர் என ஐந்து உயர்நீதிமன்றங்களுக்குச் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய நீதித்துறைப் பணிகளுக்காக 35 பரிந்துரைகளும், பதவி உயர்வும் மேலிடத்தில் இருந்து ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில், வழக்கறிஞர் முகுல் ரோஹ்டாகி, உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிப்பதில் எந்த தாமதமும் இருக்காது, அரசின் தலையாய பணி அதுவாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து இடம் மாற்றப்பட்ட நீதிபதி மல்லிகார்ஜுனகௌடா, கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்திலேயே மிக மூத்த நீதிபதியான அவர், கேரளாவுக்கு இடம் மாற்றப்பட்டு, பின்னர் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகியிருக்கிறார். நீதிபதி கிரிஷ் சந்திர குப்தா, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

நீதிபதி சதீஷ்குமார் அக்னி ஹோத்ரி, சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி, அதன் அடுத்த தலைமை நீதிபதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். நீதிபதி தின்லியாந்தங் மற்றும் நீதிபதி ராகேஷ் ரஞ்சன் முறையே திரிபுரா மற்றும் மணிப்பூர் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic