Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

மாட்டை அறுத்ததாக கூறப்பட்டு இஸ்லாமிய குடும்பம் மீது தாக்குதல்!


பக்ரீத் பண்டிகையின் போது மாட்டை அறுத்ததாக சந்தேகிக்கப்பட்டு ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர் பசு காவலர்கள்.

கடந்த செவ்வாய் அன்று இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கல் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். கர்நாடக மாநிலத்தில் காவேரி நதி நீர் தொடர்பான பிரச்சனைகளால் பெங்களூர் நகரத்தில் பெரும் பதட்டம் நிலவி வந்தால் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளால் பக்ரீத் பண்டிகையில் எந்த ஒரு இடைபாடும் இல்லாமல் சுமூகமாக கொண்டாடப்பட்டது.

பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை பலி கொடுப்பது இஸ்லாமியர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. அதே சமயம் பெங்களூர் அருகே பன்னர்காத்தா பகுதியில் ஒரு இஸ்லாமிய குடும்பம் மாட்டை அறுப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பசு காவலர்கள் அங்கு சென்று சரமாரியாக அவர்களை தாக்கியுள்ளனர். எனினும் அவர்களிடத்திலிருந்து தப்பித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் அறுத்தது மாட்டிறைச்சிதானா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic