கேரள இளம்பெண் செளமியா கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான கோவிந்த சாமிக்கு மரண தண்டனையை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் திருசூரைச்சேர்ந்த இளம்பெண் செளமியா ஓடும் இரயிலில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டார். திருசூரில் மால் ஒன்றில் வேலை பார்த்து வந்த செளமியா இரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது தமிழகத்தைச்சேர்ந்த கோவிந்தசாமி அப்பெண்ணிடன் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான்.
கோவிந்தசாமியிடமிருந்து தப்பிக்க போராடிய செளமியாவை ஓடும் இரயிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், பலத்த காயமடைந்த அந்த பெண்ணை கற்பழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட செளமியா 5 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவ்வழக்கு விரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதே தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை அடுத்து கோவிந்தசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோவிந்தசாமி கொலை செய்யும் முயற்சியில் செளமியாவை இரயிலில் இருந்து தள்ளி விட்டார் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் எனவே அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முடியாது என தெரிவித்தது. கற்பழிப்பு குற்றத்திற்காக மட்டும் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை கேட்ட செளமியாவின் தாய் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தன்னுடைய மகளை கொன்ற குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை என்றும், தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியாதாகவும் அவர் தெரிவித்தார். கேரளாவில் சமீபத்தில் ஜிஷா என்ற சட்டக்கல்லூரி மாணவியும் கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments