இந்தியாவில் இருந்து கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் பாகிஸ்தான் நாட்டு நடிகர்களை செருப்பால் அடிக்க வேண்டுமென பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் கஷ்மீர் மாநிலம் உரியில் இராணுவ தலைமையகத்தின் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவிற்கு வந்துள்ள பாகிஸ்தான் கலைஞர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேறவேண்டும் இல்லையேல் நாங்கள் அவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றுவோம் என மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே மிரட்டல் விடுத்தார்.
தற்போது பா.ஜ.கவின் எம்.எல்.ஏ சங்கீத் சோம் இதே போன்ற கருத்தை வெளியிட்டு மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் கூறியதாவது "பாகிஸ்தான் நாட்டு நடிகர்களை செருப்பால் அடிக்க வேண்டும். இந்தியாவிற்குள் வந்து பாலிவுட் படங்களில் நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டு பாகிஸ்தானிற்கு காட்டிக்கொடுக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி உணர்வு இருந்திருந்தால் இங்கே (இந்தியாவில்) இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடாது என பாகிஸ்தானிற்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் மிருகங்களுக்கு கூட நன்றி உணர்வு இருக்கும். பாகிஸ்தான் கலைஞர்கள் இங்கு வந்து நல்ல பணம் சம்பாதித்துவிட்டு நமக்கே துரோகம் இழைக்கின்றனர். இங்கே தேச பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். கவலைப்படாதீர்கள் நமது இந்திய இராணுவம் உரி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கும்" இவ்வாறு பேசினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முஜாஃபர் நகர் கலவரத்தின் போது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் இந்த சங்கீத் சோம். அதே போல 2015 ஆண்டு தாத்ரியில் மாட்டிறைச்சி விவகாரத்தில் கொல்லப்பட்ட முகமது அக்லாக் தொடர்பான வழக்கில் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இது தான் கதி என பேசியதும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments