Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

மணிப்பூர் மாநில முதலமைச்சராக வேண்டும்! - ஐரோம் சர்மிளா

want to become chief minister of manipur

மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக தாம் ஆக வேண்டுமென்றும், அதற்காக தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறு வலதுசாரி போராளியான ஐரோம் சர்மிளா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்டுள்ளார்.

அப்ஃஸ்பா சட்டத்திற்கு எதிராக கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஐரோம் சர்மிளா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். எனினும் தம்முடைய போராட்ட பாதையை மாற்றிகொள்வதாகவும் அரசியலில் இறங்கி போராடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சென்று சந்தித்து ஆலோசனைகளை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

மணிப்புரில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி தாம் அம்மாநில முதலமைச்சராக வேண்டுமென்றும், அதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும், மேலும் பெரும் கட்சிகளை தோற்கடிப்பதற்கான் யுக்திகளை கற்றுத்தருமாறு ஐரோம் சர்மிளா கேட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலும் மணிப்பூர் தேர்தலில் ஐரோம் சர்மிளாவிற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்களித்துள்ளாராம்.

இதனை அடுத்து கட்சி துவங்குவதற்கான அலோசனைகளில் ஐரோம் சர்மிளா ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic