Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

பாகிஸ்தானிற்கு செல்லும் நதி நீரை தடுக்க இந்தியா முடிவு!


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுப்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வந்த மத்திய அரசு இன்று ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்தூஸ் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் முக்கிய முடிவாக செனப் நதியின் குறுக்கே பாகுல் டுல் டேம்,சவால்கோட் டேம், மற்றும் புர்சார் டேம் என 3 தடுப்பணைகளை கட்டுவது என்றும் அதற்கான பணியை தீவிரப்படுத்தவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ரத்தத்துடன், தண்ணீர் கலந்து ஓடக்கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிபீடியா தகவலின்படி, செனாப் ஆறு இமாலச்சல பிரதேசத்தின்  தன்டி என்ற இடத்தில் சந்திரா, பாகா ஆகிய இரண்டு ஆறுகள் இணைவதால் உருவாகிறது.

இது தொடங்கும் இடத்தில் இதை சந்திரபாகா என்று அழைக்கிறார்கள். செனாப் காஷ்மீர்  மாநிலத்தின் ஜம்மு பகுதி வழியாக பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சமவெளிக்குள் நுழைகிறது. டிரிமு என்ற இடத்தில் செனாப்புடன் ஜீலம் ஆற்றுடன் இணைகிறது.

அகமதுபூர் சையல் என்னுமிடத்தில் ராவி ஆறு இணைகிறது. பின் செனாப் உச் செரிப் என்னுமிடத்தில் சத்லஜ் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாடு (ஐந்து ஆறுகள்) ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது. பியாஸ் ஆறானது சத்லஜ் ஆற்றுடன் இந்திய பஞ்சாபில் இணைகிறது. இதன் நீளம் 960 கிமீ. செனாப் ஆற்றின் நீரானது சிந்து நீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நன்றி: லைவ் டே

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic