அதிமுக கட்சியில் அசைக்க முடியாத நபராக விளங்கியவர் சசிகலா புஷ்பா. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சி சிவா விவகாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டார்.இதன் காரணமாகவே அதிமுக கட்சியின் அடிப்படை உரிமையில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாகவும், மிரட்டல் விடுத்தாகவும் கூறி பல சர்ச்சைகளை எழுப்பினார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ம் தேதி முதல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சசிகலா புஷ்பா சில தினங்களுக்கு முன்னர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார். அவரை நேரில் சந்திக்க முடியவில்லை, அரசு அதிகாரிகளுக்கு எல்லாம் உத்திரவிடுவது யார் எனவும் ஜெயலலிதாவின் இந்த நிலைமைக்கு சசிகலா தான் காரணம் என்றும் முதல்வரின் கையெழுத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி மிகப்பெரும் சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மக்களுக்கு உண்மை நிலையைச் சொல்லவேண்டும் எனக் கூறினார். இந்நிலையில் அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் "சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.

No comments:
Write comments