Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 12, 2016

4 வருஷமா மனைவி 'அது'க்கு சம்மதிக்காததால் விவாகரத்து!

man divorce his wife for not having sex

ஒரு கணவனுடன் எந்த தகுந்த காரணமுமின்றி நீண்ட நாட்களுக்கு உடலுறவுக்கு மறுப்பது என்பது மனரீதியாக கொடுமைப்படுத்தும் செயல் என்றும் இச்செயலே இருவருக்குமிடையே விவாகரத்திற்கு வழி வகை செய்யும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எந்த காரணமும் இல்லாம தன்னுடைய மனைவி தனக்கு 4 1/2 வருடங்களாக உடல் சுகம் தர மறுக்கிறார் என்றும் எனவே தனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுமென கோரியிருந்தார். இவ்விசாரணையின் போது மனைவி தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் வராததால் நீதிபதிகளுக்கு அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தனர்.

தீர்பின் போது நீதியரசர்கள் பிரதீப் நந்திரகோஜ் மற்றும் பிரதீபா ராணி ஆகியோர் கூறியதாவது "இவ்வழக்கை விசாரித்தபோது மனு கொடுத்த கணவர் மனரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு ஒரு மனைவி எந்த காரணமுமின்றி தன்னுடைய கணவருடன் உடல் ரீதியாக ஆதரவு கொடுக்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாகும்" என தெரிவித்தனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஹரியாணா மாவட்டத்தில் தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், தங்களுக்கு 10 மற்றும் 9 வயதில் இரு மகன்கள் இருப்பதாகவும் முதன் முதலில் மனைவிக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு அளித்தபோது குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic