Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 5, 2016

செயற்கை சுவாசத்துடன் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை!

artificial breathing treatment for jayalalitha
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசத்துடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்களின் குழு அளித்த தீவிர சிகிச்சையால் காய்ச்சல் குணமானது. அவர் வழக்கமான உணவுகளை சாப்பிடுவதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே, முதல்வருக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே கடந்த 30ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், ‘முதல்வருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றை சரிசெய்வதற்கான மருந்துகள் மற்றும் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic