Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 5, 2016

சசிகுமார் கொலை குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் புகைப்படம் வெளியானது!

sasikumar murder case suspected accusedகோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் படங்களை, சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

கோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கடந்த 22ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. சசிகுமாரின் போன் அழைப்புகள், 'பேஸ்புக்' பதிவு, பல்வேறு பொது இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு,
கோவையில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சி.பி.சி.ஐ.டி ஆராய்ந்து வருகிறது. சசிகுமார் கொலை செய்யப்பட்ட  இரவு 10 மணி முதல் 10:30 மணி வரையிலும், காந்திபுரம் வி.கே.கே., மேனன் ரோட்டிலுள்ள பேக்கரி ஒன்றின் கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்த போது, சில நபர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. அவர்கள் பற்றிய விபரங்கள் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருக்கும். அதனால், அவர்களது படங்கள் வெளியிடப்படுகின்றன.

அவற்றிலுள்ள நபர்கள், கோவை, பாலசுந்தரம் ரோட்டில் பி.ஆர்.எஸ்., வளாகத்தில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பொதுமக்களும், இந்நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். வழக்கு குறித்த தகவல்களை சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.எஸ்.பி ஸ்டாலினிடம் 94981 04441 என்ற மொபைல் போன் எண்ணிலும், sidcbcidcbe@gmail.com என்ற இ - மெயில் முகவரியிலும் தெரியப்படுத்தலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic