Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 8, 2016

இரண்டு மாதங்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு!


தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், இதுவரை 4 கோடிப் பேர் தங்களது ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அதிவிரைவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான ரேஷன் அட்டைகள் பழுதடைந்தநிலையில் உள்ளன. எனவே, இதற்கு மாற்றாக தமிழக அரசு விரைவில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கவுள்ளது.
இதுகுறித்து பொது விநியோகத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரேஷன் அட்டைகளுக்கு மாற்றாக தமிழக அரசு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று ரூ.318 கோடி செலவில் செயல்படுத்திவருகிறது. ஆதார் விவரங்களை ரேஷன் கடைகளில் பதிவு செய்வதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின்மூலம் ஆதார் விவரங்களை நேரடியாகப் பதிவு செய்துகொள்ளலாம். இதனால் நேரடியாக ரேஷன் கடைகளுக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை.
சென்னை போன்ற பெருநகரங்களில்தான் ஆதார் பதிவு குறைவாக உள்ளது. மக்கள் தங்களது ஆதார் விவரங்களை பதிவுசெய்த அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic