ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் 10-வது ‘லீக்’ ஆட்டம் மும்பையில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை சிட்டி - முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. மும்பை அணி தான் மோதிய 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. புனே அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், கவுகாத்தியை 1-0 என்ற கணக்கிலும் வென்றது. இன்று கொல்கத்தாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.யிடம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்தது. 2-வது ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது. கொல்கத்தா அணி மும்பையை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments