நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகி, அது வெளிப்படையாகவே தெரிய தொடங்கிவிட்ட நிலையில், ‘நீதிபதிகள் நியமனத்திலும் காவிகளை புகுத்துகிறது பாஜக’ என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் முகநூலில் கருத்து பதிந்துள்ளார் அதில், “நீதித்துறையைச் சிதைத்து இயங்காத நீதிமன்றங்கள் மூலம் நீதியை விரட்ட விரும்புகிறீர்கள். கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் இல்லாமல் நீதிமன்றங்கள் முடங்கியுள்ளன. முன்பு அதிகமான நீதிபதிகள். ஆனால், நீதிமன்ற அறைகள் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றோ நீதிமன்ற அறைகள் உள்ளன. நீதிபதிகள் இல்லை.
கடந்த ஒன்பது மாதங்களாக கொலீஜியம் கொடுத்த பெயர் பட்டியல் மத்திய அரசிடம் தூங்குகிறது. அந்த பெயர்கள் மீது ஏறி நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். ‘எதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தலைமை நீதிபதி தாக்கூர். பாஜக அரசு தன் விருப்பங்களுக்கு (சங் விருப்பங்களுக்கு) ஏற்ப நீதித்துறை செயல்படாவிட்டால்... நீதித்துறையையே முடக்கவும் தயங்க மாட்டோம் என்ற நிலைக்குச் சென்றிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் ஆட்களை உள் நுழைக்க அரசமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜி.ராமகிருஷ்ணன்.

No comments:
Write comments