சென்னை அருகே ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட வங்கிப் பணம் ஒரு கோடியே 17 லட்ச ரூபாயை ஓட்டுநரே கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் ஏடிஎம்களில் நிரப்புவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இந்த பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்ட வாகன ஓட்டுனர், பாதுகாப்புக்கு வந்த காவலர்களை மாவா என்ற போதைப் பொருளை வாங்கி வருமாறு இறக்கிவிட்டு பணத்துடன் வாகனத்தில் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும், அருகில் உள்ள சோதனைச் சாவடிகளை உஷார்படுத்தி வங்கிப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த தேடுதலில் மதுரவாயல் புளியம்பேடு இடத்தல் வாகனம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த வாகனத்தில் பணமும், டிரைவரும் இல்லை!
பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடியது தெரியவந்தது. தலைமறைவான அவரது பெயர் இசக்கி முத்து என்பது தெரியவந்தது. அவரை பிடித்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments