மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கையாக மழை, வெள்ளத்திலிலிருந்து, காப்பாற்றிக்கொள்ள வாய்க்கால், ஏறி தூர்வாரப்பட்டு, அணைகளை பலப்படுத்தி வருகிறது. வெள்ளம் வரும் பகுதியில் வடிநீர் வாய்க்கால் கட்டுவதற்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டு, வேலைகளை ஆளுங்கட்சிக்காரர்கள் பங்குபோட்டுக் கொண்டார்கள், பணிகள் தரமாக நடைபெறுகிறதா அல்லது கொள்ளை அடிக்கிறார்களா என்று கண்காணிக்கக்கூடிய அரசு அதிகாரிகள் ஏனோ கவனிப்பது இல்லை. கிராமங்களில் வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு ஜே.சி.பி, வைத்து ஒரு திட்டம் இல்லாமல் மண்ணை எடுத்துப்போட்டு வருகிறது. ஏற்கனவே மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான டெலிபோன் கேபிள்களை, கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டுக்கொண்டு போகிறார்கள், அதைவிட கொடுமை குடிநீர் குழாய் புதைக்கப்பட்டிருப்பதையும் உடைத்து வாரிப் போட்டுக்கொண்டு போகிறார்கள், இந்த இழப்புகளை யாரிடம் வசூலிப்பது, அல்லது அரசுப் பணத்தில் மீண்டும் குடிநீர் குழாய் புதைக்கவேண்டுமா என்ற கேள்விக்கு விடையில்லாமல் இருக்கிறது. இதுபோல் தமிழகம் முழுவதும் அரங்கேறிவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் வரிப்பணம் பாழாகிவருகிறது, உதாரணமாக, கடலூர் அருகில் கோண்டுர் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் பணி நடைபெறுகிறது. குடிநீர் குழாய், டெலிபோன் கேபிள், அனைத்தும் சேதப்படுத்தி கரடுமுரடான பணிகளைச் செய்கிறார்கள். அதிகாரிகள் இனியும் மௌனம்காக்காமல், ஒப்பந்தகாரர்களிடம் சேதத்துக்கு, கட்டாயமாக வசூல் செய்யவேண்டும். 50% கூட தரம் இல்லாமல் வேலைகள் நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணித்து, மக்களை பாதுகாக்க தரமாக பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர் புருஷோத்தமன்.

No comments:
Write comments