Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

ஒரு துப்பட்டாவும் சில தோட்டாக்களும்


முகமுடி போல் சுற்றி
குதிரைத்திறன் மிகுந்த
மோட்டார் பைக்கில் பின்புறமமர்ந்து
யுவனோடு பறக்கையில்
போட்ட முடிச்சு கழன்றிருக்கலாம்!

ஆணுக்குப் பெண்
இளைப்பில்லையென
ஸ்கூட்டியில் வேகமெடுத்தவள்
எதிர்க்காற்றில்
தவறவிட்டிருக்கலாம்!

பேகனின் கொடையறிந்தவள்
மாநகரில் மயிலில்லையென்பதால்
நடைபாதை நாய்களுக்குதவுமென
விட்டுச் சென்றிருக்கலாம்!

கயிறு வாங்கக் காசில்லாதவர்
பயன்படுத்திக் கொள்ளட்டுமென
வலிநிறை வாழ்வில் உழல்பவருக்கு
புதிய பயணமொன்றைக்
காட்டியிருக்கலாம்!

வெள்ளித்திரைக் காட்சிபோல்
வேண்டுமென்றே தவறவிட்டு
காற்று தூதாய்க் கொண்டுபோய்
பொருள் வயிற் பிரிந்த
தலைவனிடம் சேர்க்கட்டுமென
பசலைத் தலைவி நம்பியிருக்கலாம்!

வீதியில் உறங்கும்
மனநலம் பிறழ்ந்தவனுக்கு
தலையணைப் பொதியில்
கூடுதல் உயரத்துக்கென
இனிமேல் பயன்படுத்தப்படலாம்!

அமரர் ஊர்தி வரும்வரை
அடையாளம் தெரியாத
அநாதைச் சவத்தின்
அந்தரங்கம் மறைக்க
அவசரத்துக்குக் கையில் கிடைக்கலாம்!

விமர்சனங்கள் எதுவுமற்று
பழம்பெரும் நகரின்
புராதானக் கோவிலில்
புடைத்த மார்புகளோடு
அருள்பாலிக்கும்
கற்சிலைகளுக்கு மட்டும்
கவலையேயில்லை ஒருபோதும்.


- கார்த்தி 
FaceBook ID: Karthi PS


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic