Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 17, 2016

வீட்டிலிருந்து யானை தந்தம் பறிமுதல்: நடிகர் மோகன்லாலிடம் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு


பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வீடு, அலுவலகங்கள் உள்பட சில இடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. கொச்சி வீட்டில் நடந்த சோதனையின் போது 4 யானை தந்தங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றினார்கள்.
அதன்பிறகு அந்த யானை தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மோகன்லாலிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது யானை தந்தங்களை யானை வளர்ப்பவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியதாக மோகன்லால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மோகன்லால் மீது மூவாற்று புழா விஜிலென்ஸ் கோர்ட்டில் ஏலூர் பகுதியை சேர்ந்த பவுலோஸ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவர் தனது வழக்கில் நடிகர் மோகன்லால் முறையான அனுமதி இல்லாமல் தனது வீட்டில் யானை தந்தங்கள் வைத்து இருந்ததாக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி அவர்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நடிகர் மோகன்லால், முன்னாள் வனத்துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேரிடம் விரைவாக விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் கோர்ட்டில் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
நடிகர் மோகன்லாலிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது அவரது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic