தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜரான மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. மீது, அவரது வீட்டில் வேலை பார்த்த பானுமதி, ஜான்சி ஆகியோர் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். அதில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், சசிகலா புஷ்பாவினை 6 வாரத்திற்கு கைது செய்வதற்கு தடையும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் சசிகலா புஷ்பா புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
அவரிடம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மகளிர் காவல் ஆய்வாளர் அன்னதாய், 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments