Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 27, 2016

நதிநீர் பங்கீட்டுக்கு நாடாளுமன்றமே தீர்வு: மத்திய அரசு!


காவிரி நடுவர் நீதிமன்ற மேல் முறையீடு குறித்து தனது எழுத்துபூர்வமான வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. 

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ஆம் ஆண்டில் இறுதி தீர்ப்பை வெளியிட்டது. இதன்படி தமிழகத்துக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் காவிரியிலிருந்து வழங்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மாதம் 18ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா? என விவாதிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

மேலும் அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்படி கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் தரப்பில் கடந்த 24ஆம் தேதி எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே மத்திய அரசு எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் கோரியது. இதை தொடர்ந்து நேற்று மத்திய அரசு சார்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. காவிரி விவகாரத்தில் 17 பக்க எழுத்துபூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் நடுவர்மன்றத் தீர்ப்பே இறுதியானது எனவும் மேலும் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தை அணுக சட்டத்தில் இடமில்லை என்று கூறி உள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு ஈடான அதிகாரம் கொண்டது நடுவர் மன்றம் என்று கூறியுள்ள மத்திய அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடர முடியாது. அதேபோல நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

நதிநீர் பங்கீட்டு பிரச்னையை நாடாளுமன்றம் மூலமாகவே தீர்க்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றும், நான்கு மாநிலங்களும், இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக சட்டத்தில் இடமே இல்லை என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்து, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பை வழங்க உள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic