Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 17, 2016

தடகள வீராங்கனை சாந்திக்கு அரசு வேலை!


புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. சர்வதேச அளவில் 11 பதக்கங்கள் , தேசிய அளவில் 50 மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர், கடந்த 2006-ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆனால், அவரது பாலினம் குறித்து சர்ச்சை எழுந்ததுடன், அவர் கடுமையான பரிசோதனைகளுக்கும் ஆளானார். அவருடைய பதக்கமும் பறிக்கப்பட்டது. அவர் தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் வறுமையில் வாடிய சாந்தி செங்கல் சூளையில் வேலைபார்த்தார்.தற்போது தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த பணியாளராக சாந்தி பணியாற்றிவருகிறார்.இதுகுறித்து சாந்தி தொடர்ந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தர அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சார்ப்பில் இந்த பணிக்கான அரசானை சாந்தியிடம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic