Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 11, 2016

சாதி மோதல்கள் குறித்து வெட்கப்பட வேண்டும் - மோகன் பகவத்

avoid caste system says rss chief

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலை தாம் மனதார பாராட்டுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் நாக்பூரில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் துவங்கப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்சியில் அதன தலைவர் மோகன் பகவத் பங்கு கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது "உரி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நமது இராணுவ வீரர்கள் துல்லிய தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நடத்தினர். இதனை நாம் மனதார பாராட்டுகிறோம்.  நாட்டின் வளர்ச்சியே நம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ச்சி. இது தான் நம்முடைய நோக்கம். அனைவரும் இதில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சாதி அடிப்படையில் பிரிவது, தாக்கி கொள்வது வெட்கப்பட வேண்டியதாகும். வேற்றுமைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். பசுவை காப்பவர்கள் மற்றும் காப்பது போன்று நடிப்பவர்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் பசு பாதுகாவலர்கள் போற்றப்பட வேண்டும். பசு பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

நமது எல்லை வலுவாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நமது இராணுவ வீரர்களுக்கு பாராட்டுதலை தெரிவிக்கிறேன் . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. மோடியின் தலைமையில் இந்தியா நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. இது சில நாடுகளுக்கு பொறுக்கவில்லை . காஷ்மீரில் ஸ்திரமற்ற நிலையை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் ஒன்று பட்டு நிற்போம் இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic