‘‘காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்கும் அதிகாரம், நாடா ளுமன்றத்திற்குக் கிடையாது; மத் திய அரசுக்கு மட் டுமே உள்ளது,’’ என, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி பதி ஏ.கே.ராஜன் கூறினார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி வருமாறு:
‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம், மத்திய அரசுக்கு இல்லை’ என, அட்டர்னி ஜெனரல், உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார். உண்மை நிலை தெரியாமல், தமிழக அரசு வழக்குரைஞர்களும் எதிர்ப்பு தெரி விக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம், மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில், இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது; நாடாளுமன்றத்திற்கு, அதிகாரம் இல்லை. இதுகுறித்து, வரும், 18 ஆம் தேதி நடக்கும், வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு எடுத்துக் கூற வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில், உச்சநீதிமன்றத்தை, யாரும் ஏமாற்ற முடி யாது. தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே பிரச்சினை தீரும்.
இவ்வாறு முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் கூறினார்.
பொதுப்பணித்துறை மூத்தபொறியாளர் சங்க தலைவர், வீரப்பன், ஓய்வு பெற்ற ராணுவவீரர், கார்கில் சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:
‘இரு மாநில முதல்வர்களும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்; பிரதமர் மோடி தலையிட்டு, சமாதானம் செய்ய வேண்டும்' என்ற கருத்து, முற்றிலும் தவ றானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வு. காவிரி நீர் கிடைக்காவிட்டால், அதை நம்பியுள்ள, ஒரு கோடி பேர் பிச்சை எடுக்கும் நிலையே ஏற்படும். இதில், அரசியல் கட்சிகள் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Write comments