வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
கோவையில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னனி செய்தி தொடர்பாளர் சசிகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறியது. இதில் வணிக வளாகங்கள், நிறுவனங்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உடைக்கப்பட்டது. மேலும், காவல்துறை வாகனம் உள்ளிட்டவையும் எரிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், பொருள் இழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பில் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், மக்கள் இயக்க பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழு ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர்.
இதுகுறித்து மனித உரிமைக்கழகத்தின் பொதுச்செயலாளர் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில்,கோவையில் நடைபெற்ற வன்முறை இயல்பாக தோன்றியதா அல்லது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா என்ற உண்மையை கண்டறிய இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். மேலும், வன்முறை நடைபெற்றபோது காவல்துறை தடுக்க தவறியது குறித்தும், மக்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் எல்லா தரப்பு மக்களையும் கேட்டு வருகிறோம். இதுவரை நடைபெற்ற ஆய்வில் வன்முறை சம்பவம் காரணமாக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சம் இதுவரை நீங்கவில்லை. பெரும் மன உளைச்சலுக்கு இம்மக்கள் ஆளாகியுள்ளனர். சிறுவர்கள் கூட இந்த சம்பவத்தின் அச்சத்தில் இருந்து மீளவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது. இதில் இருந்து மக்களை மீட்டெடுக்க மக்கள் இயக்கங்கள் முன்வர வேண்டும் என்றார். மேலும், இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாகவே தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆய்வின் முடிவில் அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்க உள்ளதோடு இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மனித உரிமை கழகத்தின் பொதுச்செயலாளர் முரளி தலைமையில் வந்த குழுவில் எழுத்தாளர் தியாகு,காந்திகிராமிய பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் மற்றும் கணக்குறிஞ்சி, ராமசாமி உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.

No comments:
Write comments