Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 13, 2016

சர்ஜிகல் ஆபரேஷன் நடத்தப்பட்டிருந்தால் பாக் பதிலடி கொடுத்திருக்கும்!

surgical attack is not true
பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா சர்ஜிகல் ஆபரேஷன் தாக்குதலை உண்மையிலேயே நடத்தியிருந்தால் பாகிஸ்தான் அதற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கும் என இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி கஷ்மீரின் உரியில் இருக்கும் இந்திய இராணுவ தலைமையகத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் பகுதிக்குள் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் முகாம்கள் உட்பட 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

ஆனால் இந்த தாக்குதலை பாகிஸ்தான் தரப்பிலிருந்து மறுப்பை தெரிவித்து வருகிறது. அவ்வாறான தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை அப்படி நடத்தப்பட்டிருந்தால் இந்தியாவிற்கு சரியான பதிலடியை கொடுத்திருப்போம் என இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார். இந்தியா இதனை சர்ஜிகல் ஆபரேஷன் என்று கூறுகிறது. எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவது என்பது சர்ஜிகல் ஆபரேஷனாக கருத முடியாது. இது போர் விதி மீறல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படியான தாக்குதல் எதுவும் இங்கு நடைபெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவோடு நட்புறவு கொள்ளவே முயற்சிக்கிறது. சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிற ரத்து செய்யப்படவில்லை. பாகிஸ்தானும் சார்க் மாநாட்டை  நடத்தும். பாகிஸ்தான் அனைத்து நாடுகளுடன் அமைதியையே விரும்புகிறது" என அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic