Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 9, 2016

துபாயில் கார் ஓட்டுபவரா நீங்கள்...? இதை கொஞ்சம் படிச்சிட்டு போங்க!

dubai traffic violations penalty charges

துபாயின் பிரத்யேக சாலைகளில் இயக்கப்படும் டிராம் தொடர் வண்டிகள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தினால் கடும் அபராதத்துடன் தண்டனைகள் வழங்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் அது இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

1. டிராம் வண்டிகளின் பாதையும் சாலை போக்குவரத்தின் பாதையும் சங்கமிக்கும் 'டிராம்வே இன்டெர்செக்சன்'களில் சிவப்பு விளக்கும் சிக்னலுக்கு நிற்காமல் சென்று ஏற்படும் விபத்துக்களால் மரணங்கள் சம்பவித்தால் குறைந்தபட்சம் 15,000 திர்கம் முதல் அதிகபட்சமாக 30,000 திர்கம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் ஒன்றிலிருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

2. டிராம் வண்டிகளின் பாதையும் சாலை போக்குவரத்தின் பாதையும் சங்கமிக்கும் 'டிராம்வே இன்டெர்செக்சன்'களில் சிவப்பு விளக்கும் சிக்னலுக்கு நிற்காமல் சென்று ஏற்படும் விபத்துக்களால் காயம் ஏற்படுத்தினால் குறைந்தபட்சம் 5000 திர்கம் முதல் அதிகபட்சம் 15,000 திர்கம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் 6 மாதத்திலிருந்து அதிகபட்சம் 1 ஆண்டு வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

3. இதே சங்கமிக்கும் இடங்களில் சிவப்பு விளக்கு சிக்னலுக்கு நிற்காமல் சென்றும் (மரணங்கள், காயங்கள் இன்றி) ஏற்படும் விபத்துக்களுக்கு குறைந்தபட்சம் 3000 திர்கம் முதல் அதிகபட்சம் 6000 திர்கம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் 30 நாட்களிலிருந்து அதிகபட்சம் 6 மாதங்கள் அவரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

4. இதே சங்கமிக்கும் இடங்களில் சிவப்பு விளக்கு சிக்னலுக்கு நிற்காமல் (மரணங்கள், காயங்கள், விபத்துக்கள் ஏதும் நிகழாமல்) சென்றாலே குறைந்தபட்சம் 2000 திர்கம் முதல் அதிகபட்சம் 5000 திர்கம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் 30 தினங்களிலிருந்து அதிபட்சம் 3 மாதங்கள் வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

5. மேற்காணு புதிய திருத்தத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத (சாலை கட்டுமானம் தொடர்புடைய) உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திர இயக்குனர்களுக்கு 1 லட்சம் திர்கம் முதல் 5 லட்சம் திர்கம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் மேற்படி தண்டனையை முழுமையாக நிறைவேற்றும் வரை துபையின் சாலை போக்குவரத்து துறை அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான முன் அனுமதிகள், சான்றிதழ்கள், பெர்மிட்டுகளையும் ரத்து செய்யும்.

நன்றி: ஹாசன்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic