ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இருக்கும் பாலியல் பெண்களின் மீது கொண்ட மோகம் காரணமாகவே இந்திய இளைஞர்கள் அவ்வமைப்பில் இணைகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பர்பானி பகுதியை சேர்ந்த நாசர், அலியாஸ் குவாடிர், பின் அபுபக்கர், யாபை ஷா ஆகிய 4 பேரும் ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக கடந்த 14ஆம் தேதி சிரியா செல்ல முயற்சிக்கும்போது அவுரங்காபாத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து தாங்கள் ஓரு ஜிகாதியாக மாற வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் செல்லவில்லை. மாறாக அங்கிருக்கம் பாலியல் பெண்களின் மீது கொண்ட மோகத்தால் அங்கு செல்வதற்கு முயற்சித்துள்ளனர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பும் தங்களிடம் இருக்கும் பெண்களை பயன்படுத்தி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் நாசர் என்பவரின் தொலைப்பேசியை ஆராய்ந்து பார்க்கையில், அவர் பாலியல் சம்பந்தமான தகவல்களையே அதிகம் தேடியுள்ளார். மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளின் முகநூல் மற்றும் டுவிட்டர் ஆகிய வலைதளங்களின் வாயிலாக பாலியல் பெண்களை பற்றி அறிந்துகொண்டுள்ளார்.
அந்த அமைப்பில் உள்ள பெண்களின் வயது மற்றும் அவர்கள் சம்பந்தமான பல கேள்விகளை கேட்டறிந்துள்ளார். மேலும் சமூகவலைதளத்தில் பெண்கள் சம்பந்தமான புகைப்படங்களையும் பார்த்துள்ளார். தற்போது இவர்களை கைது செய்துள்ள தீவிரவாத தடுப்பு துறை காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
No comments:
Write comments